நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்த அழைப்பு விடுத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
தற்போது 5% மட்டத்தில் உள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எதிர்வரும் ஆண்டுகளில் 7%-8% மட்டத்திற்கு கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், அந்தப் பயணத்தில் தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளின் விரிவான பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் மற்றும் மின்னணுவியல் துறைகளின் முன்னணி சங்கங்கள், தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
உள்நாட்டு தொழிலதிபர்களை வலுப்படுத்துவதன் மூலமே நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும் என இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் உண்மையான ஆற்றலை வென்றெடுப்பதற்காக அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு அனைத்து தொழில்முனைவோருக்கும் அழைப்பு விடுத்தார்.
மேலும், இந்த இலக்கை அடைவதற்கான தங்களது ஆலோசனைகள் மற்றும் இத்துறையில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்த அறிக்கையொன்றை விரைவில் சமர்ப்பிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே