INDvsENG T20 - இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி

#India #LANKA4 #T20 #Cricket #sports #ENGLAND #L4
Prasu
3 months ago
INDvsENG T20 - இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இத்தொடரில் ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டி20 போட்டி மன்செஸ்டரில் நடைபெற்றது.

இந்த போட்டிக்கான நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்கள் எடுத்தது. 

இந்திய அணி சார்பில், அபிஷேக் 43 ஓட்டங்களும் ஷ்ரேயஸ் ஐயர் 37 ஓட்டங்களும் இஷான் கிஷன் 49 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இலக்கை அடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பில், பெத்தேல் 76 ஓட்டங்களும் புரூக் மற்றும் பண்டன் 39 ஓட்டங்கள் குவித்தனர். 

இறுதியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!