ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முக்கிய ஆதாரத்தை வழங்கிய கருணா அம்மான்

#SriLanka #Investigation #Easter Sunday Attack #Lanka4 #Karuna #L4
Prasu
3 hours ago
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முக்கிய ஆதாரத்தை வழங்கிய கருணா அம்மான்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், இதுவரை மறைக்கப்பட்டிருந்த பல திடுக்கிடும் உண்மைகள் இப்போது ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன.

முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) வழங்கியுள்ள வாக்குமூலம், அரசியல் மற்றும் பாதுகாப்பு தரப்பில் பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் தரப்பினருக்கும், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கும் இடையில் இருந்த நெருக்கமான தொடர்புகள் குறித்து கருணா அம்மான் பகிர் தகவல்களை வெளியிட்டுள்ளார். 

வெறும் வாய் வார்த்தையாகச் சொல்லாமல், இதற்கான வலுவான ஆதாரங்களையும் அவர் சி ஐ டி யிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

பிள்ளையான் தரப்பினருக்குத் தேவையான தங்குமிட வசதிகளைச் செய்து கொடுத்தது யார்? அவர்களுக்குப் பின்னால் இருந்து நிதி உதவிகளை வழங்கியது யார்? கருணாவின் வாக்குமூலத்தின் படி, சுரேஷ் சலேவினால் அறிமுகப்படுத்தப்பட்ட நபர்களே பிள்ளையான் தரப்பினருக்கு பாதுகாப்பான தங்குமிடங்களையும், சகல வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர். 

இந்த நிதி பரிமாற்றங்கள் அனைத்தும் மிக ரகசியமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது மட்டுமன்றி, பொலன்னறுவை - வெலிகந்தை பகுதியில் பிள்ளையான் தரப்பினரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 'சித்திரவதை முகாம்' குறித்தும் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4