7வது முறையாக மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா
#Australia
#Women
#LANKA4
#T20
#WorldCup
#ENGLAND
#L4
Prasu
3 months ago
10வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சயை வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அந்தவகையில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து அணி சார்பில், நாட் சிவர் 58 ஓட்டங்களும் கெம்ப் 44 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்நிலையில், 151 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 17.1 ஓவர்களில் வெறும் 3 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா சார்பில், பெத் மூனி 64 ஓட்டங்களும் ஃபீபி லிட்ச்ஃபீல்டு 48 ஓட்டங்களும் குவித்தனர்.