ஜிம்பாப்வே கால்பந்து நட்சத்திரத்தை கொல்ல முயற்சி!! காரின் மீது துப்பாக்கிச்சூடு!

#SriLanka #GunShoot #football #SouthAfrica #Zimbabwe #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
ஜிம்பாப்வே கால்பந்து நட்சத்திரத்தை கொல்ல முயற்சி!! காரின் மீது துப்பாக்கிச்சூடு!

ஜிம்பாப்வே கால்பந்து வீரர் டிவைன் லுங்கா ( Divine Lunga), மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. 

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கித் தாக்குதலில் இருந்து அவர் அதிர்ஷவசமாக உயிர் தப்பியதாக தென்னாப்பிரிக்க பொலிஸார் தெரிவித்தனர். 

31 வயதான   டிவைன் லுங்கா, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஹில்ப்ரோ என்ற நகரின் புறநகர்ப் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்தபோது, ​​அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.  

தென்னாப்பிரிக்காவில் இவ்வாறான துப்பாக்கிக் கலாச்சாரம் சாதாரண ஒருவிடயம் போல் அரங்கேறுகின்றன. மேலும் உலகில் அதிக கொலை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4