ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற நிதி ஒதுக்கீடு தொடர்பான விஷேட கலந்துரையாடல்

#SriLanka #Meeting #people #government #Lanka4 #President #Finance #AnuraKumaraDissanayake #L4
Prasu
2 hours ago
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற நிதி  ஒதுக்கீடு தொடர்பான விஷேட கலந்துரையாடல்

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சுக்கு 2026ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும் 2027ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டுத் தேவைகள் குறித்தும் விஷேட கலந்துரையாடல் ஒன்று அநுர குமார திஸ்ஸாநாயக தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில், அமைச்சின் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களினால் 2026 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் மற்றும் ஒதுக்கீட்டுத் தேவைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை இங்கு வலியுறுத்தியதுடன், அதற்காக 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மீள்குடியேற்றத் திட்டம் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் திட்டத்தை விரைவுபடுத்துமாறும், குறைந்த வருமானம் பெறுபவர்களின் பகுதியளவில் கட்டப்பட்ட வீடுகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸாநாயக அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4