நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகளின் ஆவணங்கள் மாயம் : உண்மையை வெளியிட முடியாத நிலை!!

#SriLanka #Police #Prison #Negombo #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகளின் ஆவணங்கள் மாயம் : உண்மையை வெளியிட முடியாத நிலை!!

சிறைச்சாலைக்குள் படுகொலைகள் செய்யப்படுவது வெலிகடை சிறைச்சாலையில் குட்டிமணி படுகொலை செய்யப்பட்ட காலம் முதல் தொடர்வதாக  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டினார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் தொடர்பாக நீதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகள் தற்போது எங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள், அவர்கள் தொடர்பான விபரங்கள் என்ன என்பது குறித்து அதிகாரிகளிடம் கோரியிருந்தோம். 

துரதிஷ்டவசமாக அதிகாரிகளிடம் அந்த கோப்புகள் இல்லை. அவை மாயமாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  இந்தச் சம்பவம் நடந்து பல நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும், தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் விபரங்களை அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கவில்லை. 

அரசாங்கம் இந்த விபரங்களை வெளிப்படையாக அறிவிக்காத காரணத்தினாலேயே நாடு முழுவதும் ஒரு தேவையற்ற பயமும், பதற்றமும் உருவாகியுள்ளது. 

மனிதர்களை மேலும் தண்டிப்பது சிறைச்சாலையின் நோக்கமல்ல. நீதிமன்றத்தால் அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்பட்டு விட்டது, அதற்கு மேல் சிறைக்குள் அவர்களுக்கு இன்னொரு தண்டனை தேவையில்லை. கைதிகளுக்கு எதிராக சமூகத்தில் ஒரு தவறான கருத்தியலை உருவாக்குவது தற்போதைய நோக்கமல்ல, மாறாக அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே முக்கியமாகும். 

எனவே, புலனாய்வுக் குழுக்களின் பரிந்துரைகள் வரும் வரை காத்துக்கொண்டிருக்காமல், அதற்கு முன்னரே எடுக்கக்கூடிய அவசர நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக எடுத்து, கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்றார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4