நீர் கொழும்பு சிறையில் இருந்த பெண் கைதிகள் குழுவும் வேறு சிறைகளுக்கு மாற்றம்!
#SriLanka
#Prison
#Negombo
#Transfer
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் சிலரும் தற்போது வேறு ஒரு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த கைதிகள் நேற்று வாரியபொல மற்றும் போகம்பர சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு மாற்றப்பட்டவர்களில் பல வெளிநாட்டு கைதிகளும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில் நெகம்போ சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து இந்த இடமாற்றங்கள் நடைபெற்றுள்ளன.
கலவரத்தின்போது பெண் கைதிகள் குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே