கொழும்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 71 மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல்!
நாடளாவிய ரீதியில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் கொழும்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 71 மாணவர்கள் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பேராசிரியர் இந்திகா கருணாதிலகே தெரிவித்துள்ளார்த.
மேலும் ஐந்து மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு நோய் தொற்றுக்கு ஆளான பெரும்பாலானவர்கள் கலைத்துறையை சேர்ந்தவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் தற்போதைய சூழ்நிலையையும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு, விரிவுரைகளை ஒரு வாரத்திற்கு இணையவழியில் நடத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பல்கலைக்கழகம் பல நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே