காரைதீவு வழக்குகளை கல்முனை நீதிமன்றத்திற்கு மாற்றுக: பிரதேச சபையில் தவிசாளர், உப தவிசாளர் கோரிக்கை!

#SriLanka #Kalmunai #Lanka4 #Court #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
காரைதீவு வழக்குகளை கல்முனை நீதிமன்றத்திற்கு மாற்றுக: பிரதேச சபையில் தவிசாளர், உப தவிசாளர் கோரிக்கை!

காரைதீவு பொலிஸ் பிரிவின் நீதிமன்ற வழக்குகளை சம்மாந்துறை நீதிமன்றத்திலிருந்து கல்முனை நீதிமன்றங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தவிசாளர் எஸ். பாஸ்கரன் மற்றும் உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயீல் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் நீண்டதூரம் பயணம் செய்வதைத் தவிர்த்தல், வீண் அலைச்சல், நிதி விரயம் மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல்.

சனசமூக நிலையங்கள் சரியாக இயங்காத கிராமங்களில், அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அங்கீகரிக்கப்பட்ட ஏனைய சமூக மட்ட அமைப்புகளுக்கு வழங்குவதற்கான பிரேரணை தவிசாளரால் கொண்டுவரப்பட்டது.

முன்னாள் தவிசாளரும் உறுப்பினருமான வை. கோபிகாந்த் மற்றும் தேசிய மக்கள் சக்தி பெண் உறுப்பினர்கள் இதற்கு பலத்த சட்ட ரீதியான ஆட்சேபனைகளைத் தெரிவித்தனர்.

வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 06 வாக்குகளும், எதிராக 03 வாக்குகளும் அளிக்கப்பட்டதால், 03 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

மாளிகைக்காடு மையவாடி கடலரிப்பு அணைப் பணிக்கான பாறாங்கற்கள், இடப்பற்றாக்குறை காரணமாக காரைதீவில் தற்காலிகமாக வைக்கப்பட்டு பின்னர் அகற்றப்பட்டன. இதனைச் சிலர் அரசியல் ஆதாயங்களுக்காக தமிழ்-முஸ்லிம் மக்களிடையே இனவாத, பிரதேசவாதக் கருத்துக்களாக மாற்றிப் பரப்புரை செய்கின்றனர் 

என்றும், இதன் உண்மைத்தன்மையை மக்களுக்கு விளக்க வேண்டிய பொறுப்பு சபைக்கு உள்ளது என்றும் உறுப்பினர் ஏ. பர்ஹான் சுட்டிக்காட்டினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4