இலங்கையில் டெங்கு நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45ஆக உயர்வு
#SriLanka
#Death
#Disease
#Lanka4
#Warning
#Health Department
#Dengue
#L4
Prasu
1 day ago
இலங்கையில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 65,034 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொசு பெருகும் இடங்களை அழித்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே