ஃபிஃபா - அரையிறுதிக்கு தகுதி பெற்ற பிரான்ஸ் அணி
#France
#Lanka4
#WorldCup
#football
#FIFA
#Morocco
#L4
Prasu
1 hour ago
23வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடந்து வருகிறது.
48 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அந்தவகையில் இன்றைய காலிறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகள் மோதின.
போட்டியின் முதல் பாதியில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தும் அதனை தவறவிட்டதால் முதல் பாதி கோல்கள் இன்றி சமநிலையில் முடிந்தது.
அதனை தொடர்ந்து நடந்த இரண்டாம் பாதியில் 60 மற்றும் 66வது நிமிடங்களில் பிரான்ஸ் அணி இரண்டு கோல்களை அடித்து போட்டியை வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே