நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: எதிர்க்கட்சிகள் அதிரடி!

#SriLanka #Minister #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #No-confidence motion #Harshana Nanayakkara
Abi
1 hour ago
நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: எதிர்க்கட்சிகள் அதிரடி!

நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை தாக்கல் செய்ய நாடாளுமன்ற எதிர்க்கட்சிக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், நீதியமைச்சர் தனது பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்றவில்லை என்றும், பொறுப்புக்கூறலை உறுதி செய்யத் தவறியுள்ளதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ‘சர்வஜன பலய’ கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்டோர் இன்று (10) நாடாளுமன்றத்தில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4