INDvsENG - பிரபல இந்திய அணியை வைட் வாஷ் செய்த இங்கிலாந்து
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இத்தொடரில் ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டி20 போட்டி சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் சுழற்சியை சென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது.
அந்தவகையில், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 257 ஓட்டங்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணி சார்பில், பட்டலர் 131 ஓட்டங்களும் சிறப்பாக விளையாடிய புரூக் 95 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இந்திய அணி சார்பில், இஷான் கிஷன் 56 ஓட்டங்களும் திலக் வர்மா 53 ஓட்டங்களும் குவித்தனர்.
இறுதியில், இங்கிலாந்து அணி 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு எதிரான T20 தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே