பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு

#SriLanka #Lanka4 #Warning #online #Scam #L4 #Loan
Prasu
3 hours ago
பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு

அவசர கடன் வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (Sri Lanka CERT) பொதுமக்களை எச்சரித்துள்ளது.

அத்தகைய செய்திகளில் பகிரப்படும் இணைப்புகளை (Links) திறக்கவோ, பதிவிறக்கம் செய்யவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், யாராவது அல்லது ஏதேனும் நிறுவனம் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக 101 என்ற இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதிக வட்டியில்லா அல்லது உடனடி கடன் வழங்கப்படும் என்ற பெயரில் பலர் ஏமாற்றப்படுவதாகவும், கடன் நிபந்தனைகளை நிறைவேற்றாதவர்களை மிரட்டுதல், அவமானப்படுத்துதல் போன்ற செயல்களிலும் சில மோசடி குழுக்கள் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, எளிதில் கடன் கிடைக்கும் என்ற விளம்பரங்களை நம்பாமல், அதிகாரப்பூர்வ மற்றும் நம்பகமான நிறுவனங்கள் மூலமே நிதிச் சேவைகளைப் பெறுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4