காணொளி வாயிலாக நீதிமன்ற விசாரணை - நீர்கொழும்பு சிறைக் கலவரத்தின் பின் எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்!

#SriLanka #Prison #Negombo #Case #Court #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
காணொளி வாயிலாக நீதிமன்ற விசாரணை - நீர்கொழும்பு சிறைக் கலவரத்தின் பின் எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்!

 நீர்கொழும்பு சிறையிலிருந்து மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளிக் காட்சி தொழில்நுட்பத்தின் மூலம் நடத்த சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

 இதற்கமைய இன்று (13.07) முதல் நீதிமன்றங்களில் ஆஜராக வேண்டிய கைதிகள் காணொளிக் காட்சி இணைப்புகள் மூலம் இணைக்கப்படுவார்கள் என்று குறித்த திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் ஆணையர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.

 நீர்கொழும்பு சிறையில் சமீபத்தில் நடந்த மோதலைத் தொடர்ந்து, கைதிகள் மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

 மாற்றப்பட்ட கைதிகளை அவர்களது வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்வது சவாலான விடயமாக மாறியுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 இதற்கிடையில், நீர்கொழும்பு சிறையில் சமீபத்தில் நடந்த மோதலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக சிறைகள் திணைக்களம் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4