சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி! சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகல்!
ஐபிஎல் (IPL) வரலாற்றின் மிகவும் வெற்றிகரமான மற்றும் நீண்டகால கூட்டணிகளில் ஒன்றாக திகழ்ந்த சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியினரும், அதன் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கும், பரஸ்பர இணக்கப்பாட்டின் அடிப்படையில் 18 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்ய முடிவு செய்துள்ளனர்.
2008ஆம் ஆண்டு வீரராக சென்னை அணியுடன் இணைந்த பிளெமிங், 2009 முதல் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்று அணியை புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றார்.
அவரது வழிகாட்டுதலில் சென்னை சுப்பர் கிங்ஸ் 5 ஐபிஎல் கிண்ணங்களை வென்று சாதனை படைத்தது.
பிளெமிங்கின் பிரிவு குறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐபிஎல் வரலாற்றின் மிகச் சிறந்த மற்றும் நீடித்த கூட்டணிகளில் ஒன்றை நாம் பகிர்ந்து கொண்டோம்.
நீங்கள் உருவாக்கிய பாரம்பரியம் எங்களுக்கு என்றும் உத்வேகமாக இருக்கும். அணிக்காக ஆற்றிய அர்ப்பணிப்பு, தலைமைத்துவம் மற்றும் மறக்க முடியாத பங்களிப்புக்கு மனமார்ந்த நன்றியும் மரியாதையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
18 ஆண்டுகளாக சென்னை அணியின் வெற்றிப் பயணத்தில் முக்கிய பங்காற்றிய ஸ்டீபன் பிளெமிங்கின் விலகல், சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே