இன்றைய ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்
மன உற்சாகமாக இருக்கும். தேவையற்ற கவலைகளை தூக்கிப் போடுவீர்கள். மனைவியிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு உற்சாகத்தை அளிக்கும். முக்கிய முடிவுகளை தைரியமாக எடுக்கலாம். தொழிலில் புதிய முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல்நலத்தில் சிறிது கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்
பணவரவு சீராக இருக்கும். பேச்சாளர்களுக்கு தங்களுக்கு பாராட்டுதல் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். புதிய முதலீடுகளை நிதானமாக மேற்கொண்டால் நன்மை கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். மனதில் அமைதி நிலவும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
புதிய தொடர்புகள் உருவாகும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் சேர்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பயணங்கள் வெற்றிகரமாக அமையும். எதிர்பார்த்த தகவல் கிடைக்கும்.
கடகம்
அமாவாசை தின வழிபாடு மன அமைதியைத் தரும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். சொத்து தொடர்பான காரியங்கள் சாதகமாக அமையும். குடும்பத்தில் சுபச் செய்திகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பொருளாதார நிலை மேம்படும்.
சிம்மம்
கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் அவசியம். தம்பதிகள் வெளியூர் பயணம் செல்வர். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல் மற்றும் பொதுத்துறையினருக்கு செல்வாக்கு உயரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். வருமானம் அதிகரிக்கும்.
கன்னி
நல்ல வரன் கிடைக்கும். சுப நிகழ்ச்சி நடக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வர். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி பெறும். உயர்கல்வி தொடர்பான செய்திகள் மகிழ்ச்சி தரும். உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.
துலாம்
மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்கு நல்ல கமிஷன் கிடைக்கும். பங்குச் சந்தைகளில் லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வெளியூர் பயண முயற்சிகள் வெற்றி பெறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
விருச்சிகம்
வெளிநாட்டிற்கு செல்ல விசாவுக்காக காத்திருப்பவர்களுக்கு விசா கிடைக்கும். மார்க்கெட்டிங் பிரிவினர்கள் அதிக ஆர்டர்களை பெறுவர். தொழிலில் முன்கோபம் வேண்டாம் பொறுமையுடன் செயல்படுவது வெற்றியைத் தரும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். இறை வழிபாடு நன்மை தரும்.
தனுசு
இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை ஒத்திவைப்பது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை. இறைவழிபாடு மன அமைதியைத் தரும். பொறுமையுடன் செயல்படுங்கள்.
மகரம்
அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவுவார்கள். காதலர்களிடையே ஊடல்கள் வந்து போகும். சொத்து தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாக அமையும். மாணவர்கள் கூடுதல் முயற்சி எடுத்தால் வெற்றி நிச்சயம்.
கும்பம்
மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்கு மேல் அதிகாரிகள் தங்கள் வேலைகளை பார்த்து அதிக கமிஷன் தருவர். கணினி மற்றும் தொழில்நுட்பத் துறையினருக்கு புதிய திட்டங்கள் கிடைக்கும். அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும். தம்பதிகளிடையே புரிதல் அதிகரிக்கும். திருமண முயற்சிகள் வெற்றி பெறும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
மீனம்
தொழிலில் நிதானமான அணுகுமுறை நல்ல பலன் தரும். தம்பதிகள் இடையே அன்பு அதிகரிக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் துறையினருக்கு முன்னேற்றம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். பண விஷயங்களில் திட்டமிட்டு செயல்படுங்கள்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே