ஏழு பேரின் ரகசிய வாக்குமூலம் - சுரேஸ் சாலே மற்றும் பல பெரிய புள்ளிகளுக்கும் பெரும் இடி

#SriLanka #Investigation #Easter Sunday Attack #Lanka4 #L4 #Suresh Sallay
Prasu
2 hours ago
ஏழு பேரின் ரகசிய வாக்குமூலம் - சுரேஸ் சாலே மற்றும் பல பெரிய புள்ளிகளுக்கும் பெரும் இடி

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் இப்போது ஒரு மிக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) திரட்டிய மிக முக்கியமான மற்றும் இரகசியமான தகவல்கள், எதிர்த்தரப்பான சுரேஷ் சலே தரப்பிற்கு கசிந்துள்ள விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏழு பேரின் ரகசிய வாக்குமூலம்:

  • இராணுவப் புலனாய்வுப் பிரிவைச்சேர்ந்த மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏழு முக்கிய நபர்கள், சுரேஷ் சலேவுக்கு எதிராக சிஐடி(CID)யினரிடம் இரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர். 
  • "உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சுரேஷ் சலேவுக்கும் நேரடித் தொடர்பு உண்டு" என்பதை அவர்கள் மிகத் தெளிவாகச் சாட்சியமளித்துள்ளனர். 

அறைக்குள் நடந்த விசாரணை:

  • இந்த ஏழு சாட்சிகளும் அப்போதைய கோட்டை நீதவான் இசுரு நெத்திக்குமாராவின் அறையில் சட்டப்படி மிக இரகசியமாகத் தனித்தனியாக வாக்குமூலம் வழங்கினார். 
  • சட்டப்படி, இந்த வாக்குமூலங்களை நீதவான் முத்திரையிட்டு தனது பாதுகாப்பும் பெட்டகத்தில் தான் வைத்திருக்க வேண்டும். வேறு எவரும் அதை பார்க்க முடியாது. 

கசிந்த இரகசியங்கள்:

  • நீதவான் இசுரு நெத்திக்குமார அந்த அதீத இரகசிய வாக்குமூலங்களின் பிரதிகளை, சுரேஷ் சலேயின் சட்டத்தரணியான அசித சிறிவர்தனவிற்கு வழங்கியதாகத் தெரியவந்துள்ளது.
  • இதன் மூலம் சாட்சிகள் யார்? அவர்கள் சொன்ன தகவல்கள் என்ன? என்பது இப்போது கோட்டாபய ராஜபக்ஷ தரப்புக்கும், சுரேஷ் சலேவுக்கும் தெரிந்து விட்டது.

நீதிமன்ற நடவடிக்கையும் எதிர்ப்பும்:

  • இந்த விவகாரம் அம்பலமானதையடுத்து , நீதவான் இசுரு நெத்திகுமார உடனடியாக நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு (jsc) மாற்றப்பட்டார். 
  • ஆனால், இந்த இடம் மாற்றத்திற்கு எதிராக ஒரு தரப்பு வழக்கறிஞர்களும், அரசியல்வாதிகளும் ஊடகங்களில் குரல் எழுப்பி வருவது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

சந்தேகக் கேள்விகள்:

  • சாட்சிகளின் உயிருக்கு இப்போது பாதுகாப்பு இருக்கிறதா? 
  • இந்த வழக்கை திசை திருப்பச் சில சக்திகள் நீதிமன்றத்துக்குள்ளேயே வேலை செய்கின்றனவா? 
  • உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா? அல்லது அதிகாரப் புலத்தால் உண்மைகள் புதைக்கப்படுமா?

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4