INDvsENG - முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை சென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 47.5 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 258 ஓட்டங்கள் குவித்தது.
இங்கிலாந்து அணி சார்பில், டக்கெட் 43 ஓட்டங்களும் ரூட் 76 ஓட்டங்களும் லியம் டாவ்சோன் 68 ஓட்டங்களும் குவித்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 45.2 ஓவர்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இலக்கை அடைந்தது.
இந்திய அணி சார்பில், கில் 80 ஓட்டங்களும் அக்சார் 57 ஓட்டங்களும் வாஷிங்டன் 52 ஓட்டங்களும் குவித்தனர்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே