நீர்கொழும்பு சிறைக் கலவரம் தொடர்பில் சிறையில் இருந்த 2,417 கைதிகளிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்ய உத்தரவு

#SriLanka #Court Order #Prison #Negombo #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 hours ago
நீர்கொழும்பு சிறைக் கலவரம் தொடர்பில் சிறையில் இருந்த 2,417 கைதிகளிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்ய உத்தரவு

நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தில் இருந்து சுமார் 271 காலி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) நேற்று நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. 

அண்மையில் நீர்கொழும்பில் இடம்பெற்ற சிறைக் களவரம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை நீதிபதி ஷிலானி பெரேரா முன்னிலையில் தெரிவிக்கும்போதே இந்த தகவல் வெளியிடப்பட்டது. 

கலவரம் நடந்த நேரத்தில் சிறையில் இருந்த 2,417 கைதிகளிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு நீதவான்  இதன்போது  குற்றப்புலனாய்வு துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அத்துடன் இந்தச் சம்பவம் குறித்து 40 சிஐடி அதிகாரிகள் மூன்று குழுக்களாக விசாரணை நடத்தி வருவதாகவும் மன்றில் தெரிவித்தனர். 

இதற்கமைய,  ​​சிறைச்சாலைக்குள் ஒரு T58 ரக துப்பாக்கியும், அதற்கான தோட்டாக்கூடும் கண்டெடுக்கப்பட்டன. 

சிறை வளாகத்திற்குள் 271 காலி தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டன. இந்த விசாரணையின் தொடர்பில், நீர்கொழும்பு சிறை அதிகாரிகளுக்குச் சொந்தமான 50 துப்பாக்கிகள் மற்றும் வெலிக்கடை சிறை அதிகாரிகளுக்குச் சொந்தமான 10 துப்பாக்கிகள் உட்பட மொத்தம் 60 துப்பாக்கிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 சிறைச்சாலைக்கு ஏற்பட்ட சேதம் குறித்த அறிக்கை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் இருந்து கோரப்பட வேண்டும். சிறைச்சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் தொடர்பான 02 டிவிஆர் வன்வட்டுகளை வழக்குப் பொருளாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். அ

வற்றை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கணினி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அறிக்கை கோர வேண்டும். இந்த விசாரணை தொடர்பாக சட்டமா அதிபரின் உதவியை நாடியுள்ளோம். 

தற்போது, ​​தண்டனைச் சட்டத்தின் 296 ஆம் பிரிவின் கீழ் கொலை, துப்பாக்கி அவசரச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. விசாரணையின் முடிவில் சந்தேக நபர்களின் பெயர்களை அறிவிப்போம் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தனர். 



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4