30 ரூபாய் கட்டணம்; ஆனால் கடும் துர்நாற்றம்! பதுளை அரச பேருந்து நிலைய மலசலக்கூடத்தை சீரமைக்க கோரிக்கை!

#SriLanka #Badulla #Lanka4 #Toilet #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
5 hours ago
30 ரூபாய் கட்டணம்; ஆனால் கடும் துர்நாற்றம்! பதுளை அரச பேருந்து நிலைய மலசலக்கூடத்தை சீரமைக்க கோரிக்கை!

பதுளை அரச பேருந்து தரிப்பிடத்தில் (CTB Bus Stand) அமைந்துள்ள பொது மலசலக்கூடம் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி, மிக மோசமான சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவது குறித்து நாளாந்தம் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பயணிகள் தரப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த முக்கிய பேருந்து நிலையத்தில், ஒரு பொது மலசலக்கூடத்தை கூட ஒழுங்காக பராமரிக்க முடியாத நிலையில் பதுளை மாநகர சபையும், பேருந்து நிலைய அதிகாரிகளும் தங்களது பொறுப்பிலிருந்து நழுவி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது நிலவும் அதிக துர்நாற்றம் காரணமாக பேருந்து நிலையத்தின் உட்பகுதியில் வியாபாரம் செய்யும் வர்த்தகர்களும், பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளும் சுவாசப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். 

குறிப்பாக, நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இந்த மலசலக்கூடத்தை பயன்படுத்த முடியாமல் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்" என உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.

பொதுமக்களிடம் 30 ரூபாய் வீதம் நாளாந்தம் பெருந்தொகை பணம் கட்டணமாக வசூலிக்கப்பட்ட போதிலும், அந்தப் பணம் எங்குச் செல்கிறது? ஏன் பராமரிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எனவே, பதுளை மாவட்டத்திற்குப் பொறுப்பான அரசியல் பிரதிநிதிகளும், உரிய அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு இதற்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புகளை ஒன்றிணைத்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க நேரிடும் எனவும் பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4