இணைந்த 6 கட்சிகளில் எந்த கட்சி தம் மக்களுக்கு சேவை செய்துள்ளது? அப்படியானால் இவர்கள் இணைந்ததில் யாருக்கு லாபம் மக்களுக்கா? இவர்களுக்கா?

#SriLanka #people #Tamil #Lanka4 #AnuraKumaraDissanayake #parties #Politician #Politics #L4
Prasu
5 hours ago
இணைந்த 6 கட்சிகளில் எந்த கட்சி தம் மக்களுக்கு சேவை செய்துள்ளது? அப்படியானால் இவர்கள் இணைந்ததில் யாருக்கு லாபம் மக்களுக்கா? இவர்களுக்கா?

சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் 6 கூட்டாக இணைந்து பொதுவான பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான உடன்படிக்கை நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்களின் பொதுவான மற்றும் சமகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே இந்த கூட்டணியின் முக்கிய நோக்கமாகும்.

இத்தகைய மக்கள் நலனுக்கான திட்டம் எப்போதும் வரவேற்கப்படுகிறது, இதற்கு எங்கள் லங்கா4 ஊடகம் வாழ்த்துகளை தெரிவிக்கின்றது.

இருந்தாலும் இவர்கள் ஏன் ஒன்றிணைகின்றார்கள் என்று யோசிக்கும் போது, இது தங்களுடைய கட்சியையும் வாக்கு எண்ணிக்கையையும் தக்கவைத்துகொள்ள திட்டமிட்டுள்ளனர்.

காரணம், ஜனாதிபதி அநுர குமாரவிற்கு பல வாக்குகள் மாறியுள்ளன மற்றும் மாறி கொண்டு வருகிறது. 

அந்தவகையில், இந்த கூட்டணி நடவடிக்கை ஜனாதிபதி மீதான பயத்திற்கும் தனது கட்சிகளின் வாக்குகளை தக்க வைக்க மட்டுமே தவிர மக்களுக்கு நற்பணிகளை மேற்கொள்ள அல்ல.

மக்களுக்காக சேர்வதாக இருந்தால் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி ஜனாதிபதியின் கொள்கையின் கீழ் இணைந்திருக்க வேண்டும். காரணம் ஆளும் கட்சி அநுரவின் தேசிய மக்கள் சக்தி(NPP) ஆகும்.

ஆளும் கட்சியுடன் சேர்ந்தோ அல்லது ஆளும் கட்சியுடன் அனுசரித்து போனால் மட்டுமே மக்களுக்கு நற்பணிகளை மேற்கொள்ள முடியும்.

அந்தவகையில், இவர்கள் அநுர மீதான பயத்திலும் அதைவிட, இலங்கையில் உள்ள பெரிய எதிர்க்கட்சிகள் அதாவது, ராஜபக்ஷ, சஜித் மற்றும் ரணில் போன்ற நபர்களின் பின்னால் நின்று செயல்படுகின்றனர்.

இவர்களின் அழுத்தத்தால் மட்டுமே தமிழ் மக்களுக்காக ஒன்றிணைந்து செயல்படுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4