ஃபிஃபா - இறுதி போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்ளும் பிரபல அர்ஜென்டினா அணி

#Lanka4 #WorldCup #football #England #Argentina #FIFA #L4
Prasu
5 hours ago
ஃபிஃபா - இறுதி போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்ளும் பிரபல அர்ஜென்டினா அணி

23வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

அந்தவகையில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின.

ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கோர்டன் கோல் அடித்து அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

அதனை தொடர்ந்து போட்டியின் இரண்டாம் பாதியில், 85வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் என்சொ பெர்னாண்டஸ் கோலை அடித்து போட்டியை சமநிலை படுத்தினார்.

இதனை தொடர்ந்து 92வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் ஜாம்பவான் மெஸ்ஸி பந்தை வழங்க மார்ட்டினெஸ் கோல் அடித்து அசத்தினார்.

இதனால் ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோத உள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4