இந்தியா - இங்கிலாந்து 2வது ஒருநாள் ஆட்டம் இன்று!

#India #SriLanka #today #England #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY
Abi
2 hours ago
இந்தியா - இங்கிலாந்து 2வது ஒருநாள் ஆட்டம் இன்று!

முதல் போட்டியில் தசைப்பிடிப்பு காரணமாக கேப்டன் சுப்மன் கில் பாதியில் வெளியேறியதால், இன்றைய போட்டியில் அவர் விளையாடுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 

அவர் விளையாடாவிட்டால், இடதுகை துடுப்பாட்டக்காரர் இஷான் கிஷன் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.

சுப்மன் கில் விளையாடாத பட்சத்தில், அணியின் துணை கேப்டனான ஸ்ரேயாஸ் அய்யர் இன்றைய போட்டியில் இந்திய அணியை வழிநடத்துவார்.

இந்த மைதானத்தில் இந்தியா விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்று வலுவான சாதனையை வைத்துள்ளது.

குறிப்பாக, மூத்த வீரர் விராட் கோலி இந்த மைதானத்தில் ஏற்கனவே ஒருநாள் போட்டியில் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது.

இதுவரை இங்கு 13 முறை 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளதால், இன்றைய போட்டியிலும் பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம்.

இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4