அமைச்சர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்

#Tamil Nadu #Minister #Lanka4 #Warning #Vijay #ChiefMinister #Bribery #L4
Prasu
2 hours ago
அமைச்சர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்

முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஊழல் புகாரில் சிக்கும் அமைச்சர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தால் அமைச்சர் பதவி பறிக்கப்படும். 

தவறு செய்பவர்களில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்றெல்லாம் பார்க்கமாட்டேன். தவறு நடந்தது தெரிந்தால் பதவி உடனே பறிக்கப்படும். 

தனது தலைமையிலான தவெக அரசு வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். தவெக அரசு லஞ்சமற்ற அரசாக இருக்க வேண்டும் என்பதில் அமைச்சர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பள்ளிகளுக்கு சென்று அமைச்சர்கள் ரீல்ஸ் போடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது. அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஆய்வு என்ற பெயரில் செல்வதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4