தமிழ் பேசும் மக்களின் நீதிக்காக ஒன்றுபட்டன 6 கட்சிகள்: புதிய வரலாற்று உடன்படிக்கை கையெழுத்து!

#SriLanka #people #Lanka4 #Agreement #sanakkiyan #Justice #historic #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 hours ago
தமிழ் பேசும் மக்களின் நீதிக்காக ஒன்றுபட்டன 6 கட்சிகள்: புதிய வரலாற்று உடன்படிக்கை கையெழுத்து!

இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான திருப்பமாக, தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கவும், நீதியைப் பெற்றுக்கொள்ளவும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய அனைத்துப் பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 6 முக்கிய தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க பொது உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

தமிழ் பேசும் மக்களின் பொதுவான நலனுக்காகவும், எதிர்கால சந்ததியின் விடியலுக்காகவும் இந்த கட்சிகள் பொதுத் தளம் ஒன்றில் கைகோர்த்துள்ளன. 

இந்த வரலாற்று உடன்படிக்கையின் மூலம் பிரதானமாக மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகள் அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளன.

நீண்டகாலமாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் பிராந்திய ரீதியான பிரச்சினைகள் குறித்து வெவ்வேறு தளங்களில் குரல் எழுப்பி வந்த அரசியல் சக்திகள், தற்போது ஒரே நேர்கோட்டில் இணைந்துள்ளமை தேசிய அரசியலில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அரசியல் உரிமைகள் மற்றும் மலையக மக்களின் வாழ்வாதார, வாழ்வுரிமைப் போராட்டங்களை இந்த உடன்படிக்கை ஒன்றிணைத்துள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த உடன்படிக்கை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கட்சியின் தலைவர்கள், "எமது மக்களின் நீதியான உரிமைப் போராட்டத்திற்கும், நிலையானதொரு அரசியல் தீர்வை எய்துவதற்கும் இந்த ஒற்றுமை காலத்தின் தேவையாகும்.

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவது உள்ளிட்ட எமது நியாயமான 3 கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை இந்த கூட்டுப் பயணம் தொடரும்" என உறுதியளித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4