ஆசிரியர் இடமாற்றத்திற்கு இன்று முதல் 30ஆம் திகதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
தேசிய பாடசாலை ஆசிரியர்களின் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் (Online) கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடைய அனைத்து தேசிய பாடசாலை ஆசிரியர்களும் தங்களின் விண்ணப்பங்களை இணையதளம் ஊடாகச் சமர்ப்பிக்க முடியும்.
இடமாற்றத்திற்கு விண்ணப்பிப்பதற்கான இணையவழி வசதிகள் இன்று (16) முதல் ஆரம்பமாகியுள்ளதுடன், வரும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இணையதளம் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 30ஆம் திகதி வரை. இணையவழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை (Printout) பதிவிறக்கம் செய்து, அதனை ஆசிரியர்கள் தமது பாடசாலை அதிபரிடம் எதிர்வரும் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக கையளிக்க வேண்டும்.
இம்முறை இடமாற்ற விண்ணப்ப செயல்முறைகள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் நேரடியாக அமைச்சிற்கு வந்து கையளிக்கும் விண்ணப்பங்களோ அல்லது தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
எனவே, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் அனைவரும் உரிய காலக்கெடுவிற்குள் இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே