INDvsENG - இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

#India #Lanka4 #Cricket #sports #England #ODI #L4
Prasu
2 hours ago
INDvsENG - இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சோபியா கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை சென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. 

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 44 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்களையும் இழந்து 233 ஓட்டங்கள் குவித்தது.

இந்திய அணி சார்பில், விராட் கோலி 65 ஓட்டங்களும் ஷ்ரேயாஸ் அய்யர் 66 ஓட்டங்களும் குவித்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 44.1 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில், ரூட் 99 ஓட்டங்களும் ஜாக்ஸ் 30 ஓட்டங்களும்குவித்தனர்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4