முல்லைத்தீவில் மர்ம நபர்களின் அட்டகாசம் - நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல்! ஐவர் வைத்தியசாலையில்!!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ) பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையை உடைத்து வீட்டின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷ
இந்த சம்பவம் நேற்ற இரவு இடம்பெற்றதுள்ளது.
இதில் இரு பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
25 க்கும் மேற்பட்ட கும்பல் உள்நுழைந்து தாக்குதலை மேற்கொண்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த இரு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதலின் போது வீட்டின் கூரையை உடைத்து உள்நுழைந்த கும்பல், வீட்டின் கதவுகள், ஜன்னல்கள், தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் பெறுமதியான மரத் தளபாடங்கள் உள்ளிட்ட பல பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே