வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 45 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
#SriLanka
#Vavuniya
#Court Order
#Prison
#Sexual Abuse
#Lanka4
#Case
#L4
Prasu
4 hours ago
வவுனியாவில் 14 வயதுடைய தனது சொந்த மகளைத் தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், 47 வயதுடைய தந்தைக்கு 45 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.
சம்பவம்:
- 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை:
- 2022 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், தந்தைக்கு எதிரான 4 குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.
தண்டனை விபரம்:
- 4 குற்றச்சாட்டுகளுக்காக மொத்தம் 45 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இழப்பீடு & அபராதம்:
- பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபாய் இழப்பீடாகவும், நீதிமன்றத்திற்கு 1 இலட்சம் ரூபாய் அபராதமாகவும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
"பாதுகாக்க வேண்டிய இயற்கை பாதுகாவலரான தந்தையே இவ்வாறான கடுமையான குற்றத்தை புரிந்துள்ளதால், எந்தவித கருணையும் காட்டாமல் இந்த அதிகபட்ச தண்டனை விதிக்கப்படுகிறது."
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே