புகைப்பிடிப்பவர்களால் அரசாங்கத்திற்கு 214 பில்லியன் ரூபாய் நிதி இழப்பு!!

#SriLanka #government #Smoke #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
புகைப்பிடிப்பவர்களால் அரசாங்கத்திற்கு 214 பில்லியன் ரூபாய் நிதி இழப்பு!!

புகைப்பிடிப்பதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாக பேராசிரியர் எல்.எல். அமில இசுரு தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, புகைப்பிடித்தல் காரணமாக இலங்கையில் நாளாந்தம் சுமார் 50 பேர் மரணமடைவதுடன், ஒரு ஆண்டுக்கு 20,000 இளம் உயிர்கள் இதனால் பறிபோவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

நேற்று நடைபெற்ற நேர்காணல் ஒன்றின்போது அவர் இந்த தகவலை வெளியிட்டார். 

புகைப்பவர்களின் நேரடி மற்றும் மறைமுக சுகாதாரப் பிரச்சினைகளுக்காக அரசாங்கம் வருடாந்தம் சுமார் 214 பில்லியன் ரூபாயைச் செலவிட வேண்டியுள்ளதாகவும், இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சிகரெட் புகைப்பவர்கள் தங்களைச் சுற்றியுள்ள புகைக்காத பொதுமக்களுக்கும், குறிப்பாகத் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் பெரும் தீங்கை விளைவிப்பதுடன், உலகளவில் இவ்வாறு மற்றவர்கள் வெளியிடும் புகையைச் சுவாசிப்பதன் காரணமாக மாத்திரம் வருடாந்தம் 1.6 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக உலகளாவிய சுகாதாரத் தரவுகள் எச்சரிக்கின்றன. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4