கொடிகாமத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் உயிரிழப்பு!

#SriLanka #Jaffna #Accident #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 day ago
கொடிகாமத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தென்மராட்சி  கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுட்டுவீரம் பகுதியில் நேற்று  இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

 வடமராட்சி பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சின்னராசா துளசிகரன் என்ற  இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 கொடிகாமம் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது மின் கம்பத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

 தற்போது சடலம் பருத்தித்துறை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணைகள் நடைபெற்ற பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4