INDvsENG - இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றிய இங்கிலாந்து
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை சென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 387 ஓட்டங்கள் குவித்தது.
இங்கிலாந்து அணி சார்பில், ஜேக்கப் பெத்தேல் 91 ஓட்டங்களும் பென் டக்கெட் 141 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 360 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.
இந்திய அணி சார்பில், விராட் கோலி 74 ஓட்டங்களும் சுப்மன் கில் 77 ஓட்டங்களும் ரோகித் சர்மா 138 ஓட்டங்களும் குவித்தனர்.
இறுதியில் இங்கிலாந்து அணி, 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
மேலும், இந்த சுற்று பயணத்தில் இங்கிலாந்து அணி இந்திய அணியை T20 மற்றும் ஒருநாள் தொடர் இரண்டிலும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே