இரண்டாவது முறையாக கால்பந்து உலக கோப்பையை கைப்பற்றிய ஸ்பெயின்
23வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியது.
அந்தவகையில் 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின.
போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருப்பினும் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.
தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதியிலும் இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்றத் தவறின.
இதனால் 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்தது. இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் 93 நிமிடத்தின் போது அர்ஜெண்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.
இதனால், அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட ஸ்பெயின் அணி பிரான் டோரஸ் 106 நிமிடத்தில் கோல் அடித்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார்.
இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின், 23வது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே