செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வு தளத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட தூதுக்குழு விஜயம்!
#SriLanka
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
#Chemmani Mass Grave
Abi
4 hours ago
நீதிமன்ற மேற்பார்வையில் நடைபெற்று வரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வுப் பணிகளை ஐரோப்பிய ஒன்றிய (EU) உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இன்று நேரில் சென்று பார்வையிட்டது.
இலங்கைக்கான EU தூதுவர் கார்மென் மொரேனோ, ஜெர்மனி தூதுவர் டாக்டர் ஃபெலிக்ஸ் நியூமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லாம்பெர்ட், இத்தாலி தூதுவர் டாமியானோ பிரான்கோவிக், நெதர்லாந்து தூதுவர் வீபே டி போர், EU பிரதித் தூதுக்குழுத் தலைவர் கலியா அகிஷேவா உட்பட முக்கிய அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
அகழாய்வுப் பணிகளின் தற்போதைய முன்னேற்றம், முன்னெடுக்கப்படும் நடைமுறைகள் மற்றும் நீதிமன்ற மேற்பார்வையிலான விசாரணை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் இருந்து தூதுக்குழுவினர் விரிவான விளக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே