ராகுல் காந்தி கைது மற்றும் நீட் விவகாரம்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடும் கண்டனம்!

#India #Tamil Nadu #ARREST #LANKA4 #Vijay #Rahul_Gandhi #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
ராகுல் காந்தி கைது மற்றும் நீட் விவகாரம்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடும் கண்டனம்!

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கும், நீட் பரீட்சை விவகாரத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது செய்யப்பட்டமை ஜனநாயக உரிமைகள் தொடர்பில் கவலைக்குரிய விடயம் எனக் குறிப்பிட்டுள்ள த.வெ.க, ஜனநாயக உரிமைகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

நீட் பரீட்சை நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்தே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களும் எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.

தேர்வில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் குளறுபடிகள் மாணவர்களின் மனநிலையையும் எதிர்காலத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ள அக்கட்சி, மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யுமாறு மத்திய அரசை மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!