கோட்டாபயவின் மனு மீண்டும் ஒத்திவைப்பு!
#SriLanka
#Gotabaya Rajapaksa
#CourtOrder
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனுவை, மேலதிக பரிசீலனைக்காக ஆகஸ்ட் 3ஆம் திகதிவரை ஒத்திவைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மனு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ரொமேஷ் டி சில்வா, தனது பதிலுரையை சமர்ப்பித்திருந்தார்.
அதன்பிறகு, மேலதிக சமர்ப்பிப்புகளுக்காக மனுவை ஆகஸ்ட் 3ஆம் திகதிவரை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.