டெல்லியை ஆக்கிரமித்த கரப்பான்பூச்சி அமைப்பு - முக்கிய இடங்களில் இராணுவம் குவிப்பு!

#India #SriLanka #Protest #Delhi #Warning #IndianArmy #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
8 hours ago
டெல்லியை ஆக்கிரமித்த கரப்பான்பூச்சி அமைப்பு - முக்கிய இடங்களில் இராணுவம் குவிப்பு!

நீட் பரீட்சை வினாத்தாள் கசிவை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர்தாரைப் பிரயோகம், மற்றும் தடியடிகளை மேற்கொண்டதுடன், எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட பலரை கைது செய்திருந்தனர். 

இருப்பினும் போராட்டக்காரர்கள் இன்னும் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், கொல்கத்தாவிலிருந்து CRPF அமைப்பைச் சேர்ந்த 20 கம்பெனி துணை ராணுவப் படையினர் விமானங்கள் மூலம் டெல்லி வரவழைக்கப்பட்டு, ஜந்தர் மந்தர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

 பாதுகாப்பு கருதி டெல்லி மெட்ரோவின் 16 நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், மத்திய டெல்லிப் பகுதிகளில் நேற்றிரவு இணைய சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4