தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

#SriLanka #prices #Lanka4 #Gold #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
6 hours ago
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, ரூ.374,000 ஆக காணப்பட்ட 24 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை, இன்று ரூ.1,000 அதிகரிக்கப்பட்டு ரூ.375,000 ஆகப் பதிவாகியுள்ளது.

இதன் ஒரு கிராம் விலை ரூ.46,875 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, நேற்று ரூ.344,000 ஆக விற்பனையான 22 கரட் தங்கம் ஒரு பவுனின் விலையும் ரூ.1,000 உயர்ந்து, இன்று ரூ.345,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதன் ஒரு கிராம் விலை ரூ.43,125 ஆகும். சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு அமையவே உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் நிலவி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4