பண்டாரகமவில் வேகமாகப் பரவும் டெங்கு: தீவிர சோதனையில் அதிகாரிகள்!
#SriLanka
#Lanka4
#Official
#Dengue
#kalutara
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
களுத்துறை - பண்டாரகம சுகாதார மருத்துவ அதிகாரிப் பிரிவில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 675 ஆக உயர்ந்துள்ள நிலையில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த விசேட கூட்டு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பரிசோதகர்கள், பூச்சியியல் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து பண்டாரகம பகுதியில் தீவிர வீடு வீடான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது, நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றாடலை வைத்திருந்த வீடொன்றின் உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறிய பல வீடுகளுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே