அநுர அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம் - வேகமாக முன்னேறும் நாடுகளின் பட்டியலில் 04 ஆம் இடம்!

#SriLanka #economy #AnuraKumaraDissanayake #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
அநுர அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம் - வேகமாக முன்னேறும் நாடுகளின் பட்டியலில் 04 ஆம் இடம்!

சர்வதேச நிதி நிறுவனத்தால் (IIF) உலகின் மிக வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் ஒன்றாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 2026 ஆம் ஆண்டின் IIF முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, உலகளவில் மிக வேகமாக முன்னேறி வரும் நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

 வியட்நாம் முதலிடத்திலும், பெலிஸ் இரண்டாம் இடத்திலும், மொசாம்பிக் மூன்றாம் இடத்திலும் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டாளர் உறவுகள் ஆகிய துறைகளில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக IIF சுட்டிக்காட்டியுள்ளது.

 மேலும், கடன் வெளிப்படைத்தன்மைக்கான உலகளாவிய தரவரிசையில் இலங்கை ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது, நிதி நிர்வாகத்தையும் முதலீட்டாளர் நம்பிக்கையையும் வலுப்படுத்துவதற்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4