எல் நினோ தாக்கம் - நீர் விநியோகம் தடைப்படுமா? தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை விளக்கம்

#SriLanka #weather #water #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #El Nino
Thamilini
2 hours ago
எல் நினோ தாக்கம் - நீர் விநியோகம் தடைப்படுமா?  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை விளக்கம்

தற்போது நிலவும் எல் நினோ காலநிலை காரணமாக  பாதிப்பு ஏற்பட்ட போதிலும், நாட்டின் எந்தப் பகுதியிலும் நீர் விநியோகக் கட்டுப்பாடுகளை விதிக்கும் உடனடித் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், அத்தகைய முடிவு எதிர்கால நிலவரங்களைப் பொறுத்தே அமையும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. 

இலங்கையின் நீர்ப்பாசனத் திணைக்களமோ அல்லது மகாவலி அதிகாரசபையோ இதுவரை நீர் எடுப்பதில் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்காததால், சபை தனது அதிகபட்ச நீர் உற்பத்தித் திறனில் தொடர்ந்து செயல்படும் என்று NWSDBஇன்  தலைவர் சந்தன பண்டார கூறினார். 

 இருப்பினும், எதிர்காலத்தில் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்து, நீர்ப்பாசனத் திணைக்களமோ அல்லது மகாவலி அதிகாரசபையோ நீர் எடுப்பைக் கட்டுப்படுத்த நிர்பந்திக்கப்பட்டால், அக்காலத்தில் நிலவும் சூழ்நிலைகளின் அடிப்படையில் நீர் விநியோகக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து NWSDB பரிசீலிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4