மஹிந்தவிற்கு எதிராகச் சாட்சியளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன

#SriLanka #Mahinda Rajapaksa #Lanka4 #land #Politician #Bribery #L4
Prasu
1 hour ago
மஹிந்தவிற்கு எதிராகச் சாட்சியளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சாட்சியமளித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் கொழும்பு இராணுவத் தலைமையகக் காணியை ஷாங்க்ரிலா ஹோட்டலுக்கு விற்பனை செய்ததில் சுமார் 100 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நேற்றையதினம் முன்னிலையான அவர் 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரால் வழங்கப்பட்ட சத்தியக்கடதாசியின் படி, TPL Itma நிறுவனம் மற்றும் Heliat எனும் ஆலோசனை நிறுவனம் ஆகியவற்றின் ஊடாக இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிங்கப்பூர் நிறுவனங்கள் ஊடாகக் கைமாறிய இந்தப் பணம், தங்கல்ல பிரதேசத்தில் ஹோட்டல் வாங்கவும் சீ.எஸ்.என் ஊடகத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக 'இலஞ்சம் ஊழல் மற்றும் வீண்விரையத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி' அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4