எபோலாவை கட்டுப்படுத்தியது உகாண்டா - தொற்று பாதிப்பு இல்லாத நாடாக அறிவிப்பு!
#SriLanka
#Uganda
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Ebola
#Skin infection
Thamilini
2 hours ago
உகாண்டாவில் எபோலா தொற்றுப் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுகாதார அமைச்சர் நேற்றைய தினம் உகாண்டாவை எபோலா இல்லாத நாடாக அறிவித்துள்ளார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், 20 பேர் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்தனர்.
2000-ஆம் ஆண்டில் தனது முதல் பெருந்தொற்று பதிவு செய்ததில் இருந்து, உகாண்டா பலமுறை எபோலா பரவல்களைச் சந்தித்துள்ளது.
மேலும், பல ஆண்டுகளாக நாடு பெற்ற நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, சமூகப் பரவலைக் கட்டுப்படுத்தி, சமீபத்திய தொற்றுகளை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
உகாண்டாவில் கடைசியாக எபோலா நோயால் பாதிக்கப்பட்ட காங்கோ நாட்டைச் சேர்ந்த நோயாளி, ஜூன் 22 அன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே