மலையக மக்களுக்கான காணி உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்து!

#SriLanka #Mannar #Malayagam #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
மலையக மக்களுக்கான காணி உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்து!

மலையக மக்களுக்கான காணி உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும், ஹட்டன் பிரகடனம் ஊடாக அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

 மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு மாண்புமிகு மலையகம் கூட்டிணைவு ஏற்பாட்டில் தலைமன்னாரில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் நேற்று (28) செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. 

 2023 ஆம் ஆண்டு தலைமன்னாரில் நிறுவப்பட்ட இந்த நினைவுத்தூபியில் மலையக மக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் மன்னார் பகுதி மக்கள் ஒன்றிணைந்து மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர். 

 கடந்த ஜுலை மாதம் 28ஆம் திகதி தலைமன்னாரில் ஆரம்பமான மாண்புமிகு மலையகம் நடைபயணம், மாத்தளைவரை வந்தடைந்தது. 

 மன்னாரில் தரையிறங்கிய மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்து மாத்தளை வரை கால்நடையாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். 

 இதனை நினைவுகூரும் வகையில், மாண்புமிகு மலையகத்திற்கான கூட்டிணைவு, சிவில் அமைப்பு என்பன இணைந்து மன்னாரில் இருந்து மாத்தளை வரையான நடைபயணத்தை ஏற்பாடு செய்திருந்தன. இந்த நடைபயணம் 11 கோரிக்கைகளை முன்வைத்திருந்தன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4