அசாமில் கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு
அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கால் பலியானோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நேற்று சிவசாகர் மாவட்டத்தின் நாசிரா வருவாய் வட்டத்தில் வெள்ள நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தற்போது மொத்த உயிரிழப்பு 75 ஆக அதிகரித்துள்ளது.
4.45 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சிவசாகர், சராடியோ, கோலாகாட், ஜோர்ஹாட், நகோன், சோனித்பூர் மற்றும் காம்ரூப் மெட்ரோபாலிட்டன் ஆகிய 7 மாவட்டங்கள் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
21 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 622 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. அதிகபட்சமாக சராடியோ மாவட்டத்தில் 1.42 லட்சம் மக்களும், சிவசாகரில் 97,000 மக்களும், ஜோர்ஹாட்டுகில் 57,000 மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பல்வேறு முக்கிய சலுகைகளையும், வரலாற்றுச் சிறப்புமிக்க நிவாரணத் திட்டங்களையும் அறிவித்துள்ளார்.
இனி வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற பிரேத பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
சம்பந்தப்பட்ட வட்டார அதிகாரி வழங்கும் சான்றிதழே போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக வழங்கப்படும் ₹4 லட்சம் அரசு நிவாரணத்துடன், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக ₹5 லட்சம் சேர்க்கப்பட்டு, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மொத்தம் ₹9 லட்சம்வழங்கப்படும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே