முழு இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் வசூல் - வவுனியாவில் உள்ள மருத்துவமனைக்கு 500000 அபராதம்

#SriLanka #Vavuniya #Hospital #Fined #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
முழு இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் வசூல் - வவுனியாவில் உள்ள மருத்துவமனைக்கு 500000 அபராதம்

முழு இரத்த எண்ணிக்கை (FBC) பரிசோதனைக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாகக் கட்டணம் வசூலித்ததமைக்காக வவுனியாவில் உள்ள மருத்துவமனைக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் (CAA), தனது புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது இதனை கண்டுப்பிடித்துள்ளது.

 அந்த மருத்துவமனை, இரத்தப் பரிசோதனைக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக நோயாளிகளிடம் கட்டணம் வசூலித்ததை அவர்கள் கண்டறிந்தனர்.

 விசாரணையைத் தொடர்ந்து, வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் அந்தத் தனியார் மருத்துவமனைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 அதன்படி, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருத்துவமனைக்கு 5 லட்சம் அபராதம் விதித்த தீர்பளித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4