கல்லூரி மாணவர்களிடம் எச்.ஐ.வி. அதிகரிப்பு: 7,000 பேருக்கு தொற்று!

#India #Lanka4 #College Student #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #HIV
Abi
2 hours ago
கல்லூரி மாணவர்களிடம் எச்.ஐ.வி. அதிகரிப்பு: 7,000 பேருக்கு தொற்று!

கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி (HIV) தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து நோய்த்தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில், கர்நாடக அரசு பல்வேறு அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொடர்பான விழிப்புணர்வு, பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளை தடையின்றி வழங்க சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4