ஷேக் ஹசீனா கைது செய்யப்படுவது உறுதி - வங்கதேச அமைச்சர்
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவிலிருந்து திரும்பி நாட்டில் காலடி எடுத்து வைத்த கணமே கைது செய்யப்படுவார் என்று அந்நாட்டின் சட்ட அமைச்சர் எம். அசாத்துசமான் தெரிவித்துள்ளார்.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதிலும், டிசம்பர் மாதத்திற்குள் நாட்டிற்குத் திரும்புவதில் உறுதியாக இருப்பதாக ஹசீனா தெரிவித்ததை தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
"நான் கொல்லப்படலாம். நான் கைது செய்யப்படலாம். நான் சிறைக்கு அனுப்பப்படலாம்... என் கதி என்னவென்று எனக்கு முழுமையாகத் தெரியும். ஆனாலும், என் மக்கள் என்னை அழைப்பதால் நான் திரும்பிச் செல்ல விரும்புகிறேன்," என்று ஷேக் ஹசீனா கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
ஆனால், நவம்பர் 2025ல் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஹசீனாவுக்கு, கைது செய்யப்படுவதற்கு முன்பு நேரடியாக நீதிமன்றத்தில் சரணடைவதற்கான வாய்ப்பு கூட கிடைக்காமல் போகலாம் என்று அசாத்துசமான் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
78 வயதான அவருக்குத் திரும்புவதற்கான பாதை எளிதாக இருக்காது எனத் தோன்றினாலும், அவருக்குத் திரும்புவதற்கான உரிமை உண்டு என்று கூறிய அசாதுஸ்ஸமான், "சட்டம் அதன் போக்கில் செல்லும், நாங்கள் சட்டத்தை மீறி எதுவும் செய்ய மாட்டோம்" என எச்சரித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே